தனியார் பேருந்துகளிலும் இலவசப் பயணம்! – நாளை மறுநாள் (30.09.26) வேலைநிறுத்தம் எனத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அதிரடி வேலைநிறுத்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை மறுநாள் (30.09.2026) முதல் இந்த வேலைநிறுத்துப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் முன்வைக்கும் முக்கிய கோரிக்கையில், “தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

அதற்கு நஷ்ட ஈடாகத் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர். அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்பட்டு வரும் சூழலில், தனியார் பேருந்துகளுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் முதன்மை கோரிக்கையாகும்.

நாளை மறுநாள் (30.09.26) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்துப் போராட்டத்தால், தினசரி பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் பேருந்துகள் இயங்கவில்லை என்றால் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவை ஸ்தம்பிக்கும் நிலை உருவாகலாம்.

இந்த அதிரடி வேலைநிறுத்த அறிவிப்பு குறித்துத் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்துமா அல்லது மாற்று நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உயர்ந்துள்ளது. போக்குவரத்துத் துறையில் தனியார் பேருந்து உரிமையாளர்களின் இந்த அறிவிப்பு தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Comment