தங்கம் வாங்கத் திட்டமிட்டுக் காத்திருந்த பொதுமக்களுக்கும், நகைப்பிரியர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியளிக்கும் விதமாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 வரை குறைந்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி விலை குறைப்பின் காரணமாக, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.97,720 ஆகக் குறைந்து விற்பனையாகி வருகிறது.
சவரன் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் இறங்கியுள்ளதும், ஒரே நாளில் இரண்டாயிரம் ரூபாய்க்கும் மேல் விலை குறைந்திருப்பதும் இல்லத்தரசிகள் மற்றும் திருமண வீட்டார் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை குறைப்பைப் பயன்படுத்தி நகைக்கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் தங்கம் வாங்கத் தொடங்கியுள்ளனர்.