“நேபாள மக்களுடன் இந்தியா!”: வெள்ளப்பெருக்குப் பேரழிவு – பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் மற்றும் உதவிக்கரம்!

அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாகப் பெருமளவிலான உயிரிழப்புகளும் சொத்து சேதங்களும் ஏற்பட்டு பெரும் பேரழிவு உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நேபாள வெள்ள நிலவரம் குறித்துத் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, “இந்த இக்கட்டான சூழலில் நேபாள மக்களுடன் இந்தியா என்றும் உறுதியாகவும் துணையாகவும் நிற்கிறது; பாதிப்பில் இருந்து மீளத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க இந்தியா தயாராக உள்ளது” என உறுதியளித்துள்ளார்.

இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டின் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்து தர இந்தியா முன்வந்துள்ளது.

அண்டை நாட்டின் இந்தத் துயரமான தருணத்தில், இந்தியா உடனடி உதவிக்கர நீட்டியுள்ளது இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவையும் இந்தியாவின் மனிதநேயப் பண்பையும் உணர்த்தும் வகையில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Comment