“அனுமதி கோரும் ஈஷா!”: நேபாள கைரோங் பகுதியில் 80 பேர் நிலை அறியவில்லை – தேடுதல் பணிக்குச் செல்ல சத்குரு கோரிக்கை!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஈஷா யோகா மையம் சார்பில் ஆன்மிக சுற்றுலா சென்ற 80 பேரின் நிலை என்னவென்று தெரியாத சூழல் நிலவி வரும் நிலையில், அவர்களைத் தேடும் பணிக்கு தங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி ஈஷா நிறுவனரும் ஆன்மிக குருவுமான சத்குரு அரசு நிர்வாகத்திற்கும் நேபாள அரசுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில், நேபாளத்தின் கைரோங் (Gyirong) பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஈஷா குழுவைச் சேர்ந்த 80 பேரைக் இழந்து தவிப்பது மிகுந்த வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்திற்குப் பிறகு அவர்களைப் பற்றிய எவ்விதத் தகவலும் கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தானும் ஈஷா யோகாவின் சில தன்னார்வலர்களும் கைரோங் பகுதிக்குச் சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது சாகா (Saga) பகுதியில் இருக்கும் சத்குரு, மீட்புப் பணிகளுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல், மாயமானவர்களைக் கண்டறியும் முயற்சியில் துணையாக நிற்க மட்டுமே விரும்புவதாகவும், கைரோங் செல்ல அரசு நிர்வாகம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் நேபாள அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 80 பேரின் கதி என்னவென்று தெரியாமல் தவிக்கும் குடும்பத்தினரிடையே இந்தச் செய்தி பெரும் கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment