“Don’t come here.. Get out!”: சபாநாயகர் மேடையை முற்றுகையிட்ட திமுக எம்.எல்.ஏ – டென்ஷனாகி ஜே.சி.டி பிரபாகர் அதிரடி எச்சரிக்கை!

தமிழகச் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காரசார விவாதங்களின் போது, சபாநாயகரின் இருக்கையைச் சூழ்ந்து எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தால் அவையில் உச்சக்கட்டப் பரபரப்பு ஏற்பட்டது.

முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையில் குறிப்பிடப்பட்ட சில கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி திரண்டு சென்று பலத்த முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் சபாநாயகரின் இருக்கையை நோக்கி மிகவும் நெருக்கமாகச் சென்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய முயன்றார். இதனால் மிகுந்த கோபமடைந்த சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், உச்சக்கட்ட டென்ஷனாகி, அவரைப் பார்த்து “Don’t come here.. Get out” என்று ஆங்கிலத்தில் மிகக் காரசாரமாக எச்சரிக்கை விடுத்தார்.

சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்தே அவைக் காவலர்கள் களமிறக்கப்பட்டு, அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

முதலமைச்சரின் உரை, சர்க்காரியா கமிஷன் விவகாரம், எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு மற்றும் அவைக் காவலர்களின் அதிரடி நடவடிக்கை எனத் தொடர் புயல் வீசி வரும் சூழலில், சபாநாயகர் இருக்கைக்கே சென்று நெருக்கடி கொடுக்க முயன்ற எம்.எல்.ஏ-வை பார்த்துச் சபாநாயகர் ஆவேசமாக எச்சரித்த இந்த சம்பவம், சட்டப்பேரவை வரலாற்றில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment