கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர்கள் இனித் தங்கள் பெயருக்கு முன்னால் “Tr.” என்ற சிறப்புப் அடைமொழிக் குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்று அம்மாநிலத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் “Dr.” என்றும், வழக்கறிஞர்கள் “Adv.” என்றும் பயன்படுத்துவதைப் போல, சமுதாயத்தை உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தெரிவித்த துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், “எதிர்காலத் தலைமுறையைச் செதுக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பங்களிப்பைக் கௌரவிக்கும் நோக்கிலும், அவர்களுக்குச் சமுதாயத்தில் உரிய மரியாதையை அளிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்குப் புதிய அடையாளத்தையும் மிகப்பெரிய கௌரவத்தையும் அளிக்கும் கர்நாடக அரசின் இந்த வினோதமான மற்றும் ஊக்கமளிக்கும் அதிரடி நடவடிக்கை, அம்மாநில ஆசிரியர் சமூகத்தினர் இடையே பெருமகிழ்ச்சியையும் பொதுமக்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும் பெற்று வருகிறது.