பள்ளிகளில் கணித பாடத்தை மாணவர்கள் எளிமையாகவும் ஆர்வத்துடனும் கற்றுக்கொள்ளும் வகையில், கணக்கு பாடங்களின் தலைப்புகளை மாற்றிமைக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
வழக்கமான கடினமான சூத்திரங்கள் மற்றும் எண்களாகக் கற்பிக்கப்படும் முறையிலிருந்து விலகி, இனி மாணவர்களுக்கு எளிதில் புரியக்கூடிய சுவாரசியமான கதைகளின் வழியே கணக்குப் பாடங்களைக் கற்பிக்கப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மாணவர்களிடையே கணிதப் பாடம் குறித்த பயத்தைப் போக்கி, அவர்களின் புரிதல் திறனையும் சிந்தனை ஆற்றலையும் மேம்படுத்துவதே இப்புதிய முயற்சியின் முதன்மை நோக்கமாகும்.
இதற்காக ஆசிரியர்கள் இப்புதிய மற்றும் புதுமையான முறையில் கற்பிக்க ஏதுவாக பாடப்புத்தகங்கள் விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளன. கல்வித்துறையில் கொண்டுவரப்படும் இந்த முற்போக்கான மாற்றம், பள்ளி மாணவர்களிடையேயும் கல்வியாளர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.