அமைச்சரை சந்திக்க இனி வரிசை வேண்டாம்! ராஜ்மோகனின் புதிய திட்டத்தால் பாராட்டு

தமிழக அரசின் நிர்வாக சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய E-Petition System-ஐ அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தலைமைச் செயலகத்தில் அமைச்சரை நேரில் சந்திக்க விரும்பும் பொதுமக்கள் இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. QR Code-ஐ ஸ்கேன் செய்து தங்களது கோரிக்கை அல்லது புகாரை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையின் மூலம் மக்கள் தங்களது மனுக்களை டிஜிட்டல் வடிவில் பதிவேற்றம் செய்ய முடியும். மேலும், அமைச்சரை சந்திக்க விரும்புவோர் நேரடியாக Appointment-ஐ முன்பதிவு செய்யும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

புகார் அல்லது கோரிக்கை பதிவானதும், OTP சரிபார்ப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் மூலம் மனு பதிவு செய்யப்படும். இதன் மூலம் மனுக்கள் தொலைந்து போவது அல்லது தாமதமாக பரிசீலிக்கப்படுவது போன்ற பிரச்சனைகள் குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ராஜ்மோகனின் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த E-Petition System, நிர்வாக வெளிப்படைத்தன்மையையும், மக்களுடன் நேரடி தொடர்பையும் மேம்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் மற்றும் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தும் மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

அரசு அலுவலகங்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேவைகளை எளிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாக இந்த திட்டம் கருதப்படுகிறது. பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கவும் இந்த முறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment