ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான பெருமதிப்புள்ள இடத்தை சட்டவிரோதமாகப் பெயர் மாற்றம் செய்து, திமுக பிரமுகர் பத்திரப்பதிவு செய்துள்ளதுடன், தற்போது அது திமுக அலுவலகமாகவே செயல்பட்டு வருவதாக அமைச்சர் ரமேஷ் பகிரங்கக் குற்றச்சாட்டைக் சுமத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலியான ஆவணங்களைக் கொண்டு மிகத் துணிச்சலாக இந்த நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாகச் சாடினார். “வெறும் பகுதிச் செயலாளராக இருந்து கொண்டு ஒருவரால் எப்படி இவ்வளவு பெரிய அளவில் ஊழல் செய்ய முடியும்? அவருக்குப் பின்னால் இருந்து உதவியது யார்?” என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ரமேஷ், அதிகார வர்க்கத்தின் பின்னணியையும் முந்தைய அரசு நிருவாகத்தின் தொடர்பையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலத்தின் நிலத்தையே ஆக்கிரமித்து அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றியிருப்பது முந்தைய ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டிற்கும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் சான்றாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆளும்கட்சியான தவெக-வின் அமைச்சர் நேரடியாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த ஆவணங்களை ஆதாரமாகக் காட்டிப் பேசியிருப்பது, எதிர்க்கட்சியான திமுக-விற்குப் பெரும் அரசியல் நெருக்குதலை உருவாக்கியுள்ளது.
கோவில் சொத்துக்களை மீட்டெடுப்பதில் தவெக அரசு உறுதியாகச் செயல்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்த அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் மத்தியில் வலுத்துள்ளது.