ஒன்றிலாவது வென்றாரா?: எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடிய அமைச்சர் செங்கோட்டையன்!

எடப்பாடி பழனிசாமி என்ன முதலீடு வாங்கி வந்தார் என்பது எனக்குத் தெரியாது என்றும், தமிழ்நாட்டில் அவர் என்ன சாதனை செய்து வெற்றி பெற்றார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாராபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஜெயலலிதா மறைந்த காரணத்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார் எனத் விமர்சித்தார். மேலும் தொடர்ந்த அவர், “அவர் செய்த சாதனையாகக் கூறி இதுவரை, 11 தேர்தலில் ஒன்றிலாவது மக்கள் தனக்கு ஆதரவு தந்து வென்றதாக அவரால் சொல்ல முடியுமா?” என அதிரடியாகக் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவரும் தற்போதைய தவெக அரசின் அமைச்சருமான செங்கோட்டையனின் இந்தத் தனிப்பட்ட சாடல், எதிர்க்கட்சியான அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கடந்தகால ஆட்சி நிர்வாகத்தையும், அவர் சந்தித்துள்ள தொடர் தேர்தல் தோல்விகளையும் சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்டுள்ள இந்த விமர்சனம், இரு தரப்பிற்கும் இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் தலைமையில் தமிழகம் அடைந்து வரும் சாதனைகளை மையப்படுத்தி ஆளும்கட்சி பேசி வரும் நிலையில், அதிமுகவின் தலைமை ஆளுமையை இலக்கு வைத்துச் செங்கோட்டையன் கொடுத்துள்ள இந்த அதிரடிப் பேட்டி, தமிழக அரசியல் களத்தில் சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment