தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜயின் புகழும் செல்வாக்கும் தமிழக எல்லையைக் கடந்து வட மாநிலங்களிலும் எதிரொலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இந்தி பேசும் மாநிலங்களில் கூட விஜய் அவர்களின் தாக்கம் மற்றும் நன்மதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது” என்று சுட்டிக்காட்டினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “பிற மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கூட தங்களது மாநிலத்திற்கும் விஜய் போன்ற ஒரு தெளிவான, மக்கள் நலனில் அக்கறையுள்ள முதலவர் கிடைக்க வேண்டும் என்று பகிரங்கமாகப் பேசி வருகின்றனர்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
திரைத் துறையில் சாதித்துத் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ள விஜயின் தொலைநோக்குப் பார்வையும், மக்கள் நலச் செயல்பாடுகளும் தேசிய அளவில் கவனத்தைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தைத் தாண்டி வடமாநில மக்களிடையேயும் விஜய்க்கு உள்ள அலை மற்றும் ஆதரவு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துகள், தற்போது அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தையும் எதிரொலியையும் ஏற்படுத்தியுள்ளது.