தனியார் மதுபான ஆலைகளில் இருந்து மது கொள்முதல் செய்யப்படும் போது, வரி கட்டாமலும் முறையான கணக்கில் வராமலும் இருக்கும் சில பெட்டிகளையும் சேர்த்து ஏற்றிவிடுவதைச் சில நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
வரி கட்டுவதிலிருந்து தப்பிப்பதற்காகத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒரு நிறுவனத்திற்கு, சமீபத்தில் அமைச்சர் விக்னேஷ் ரூ. 2 கோடி அபராதம் விதித்ததுடன், டாஸ்மாக்கில் இருந்து அந்த நிறுவனத்தின் சரக்குகளைக் கொள்முதல் செய்வதையும் ஒரு வார காலத்திற்குச் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தார்.
அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையால் வெகுண்டெழுந்த சில தனியார் மது ஆலை நிறுவனங்கள், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த திமுக மாஜி ஒருவருடன் கைகோர்த்துக்கொண்டு, டாஸ்மாக் துறையிலிருந்தே அமைச்சரை நகர்த்துவதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன.
ஆளுங்கட்சிக்குள்ளேயே இதற்கான பல கட்ட உள்வேலைகளை அவர்கள் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமக்கு எதிராக சொந்தக் கட்சிக்குள்ளேயே அரங்கேறும் இந்தத் திரைமறைவு அரசியல் மற்றும் நெருக்குதல்கள் தான் தற்போது அமைச்சர் விக்னேஷை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.