தமிழகத்தின் முக்கிய நதிநீர் உரிமைகள் மற்றும் தொழிற்துறை முதலீடுகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், த.வெ.க அரசு மற்றும் முதலமைச்சரின் செயல்பாடுகளை விமர்சித்து ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் பதிவிட்டுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
த.வெ.க அரசின் போக்கு குறித்து எள்ளல் தொனியில் கருத்து தெரிவித்துள்ள ஊடகவியலாளர் நெல்சன் சேவியர், “கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்காக ஓயாமல் உழைக்கும் Cute CM!” என்று கிண்டலாகச் சாடியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனைகளான காவிரி நதிநீர் உரிமை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் மாநிலத்திற்கு வர வேண்டிய புதிய தொழில் முதலீடுகள் ஆகிய முக்கியக் காரியங்களில் குரல் கொடுக்காமல், அமைதி காத்து வரும் தமிழக அரசின் மெத்தனப் போக்கையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாநில எல்லைப் பிரச்சனைகள் மற்றும் நதிநீர் உரிமைகள் தொடர்பாகப் பிற அண்டை மாநிலங்களின் நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க த.வெ.க அரசு தவறிவிட்டதாகவும் அவர் முன்வைத்துள்ள இந்த எள்ளல் விமர்சனம், அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.