“ரேஷன் கடையில் வெங்காயம்!”: கிலோ ரூ.35-க்கு விற்பனை – சட்டசபையில் அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு!

வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் சட்டசபையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர், முதற்கட்டமாகத் தேர்ந்ந்தெடுக்கப்பட்ட 8,739 ரேஷன் கடைகளில் நாளை மறுநாள் (செப்டம்பர் 3) முதல் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றி வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சட்டசபையில் அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment