250+ டாஸ்மாக் கடைகள் மூடல்!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக எழுந்த புகார்களின் பேரில் டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் அண்மையில் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டனர்.

நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்டித்தும், ஊழியர்கள் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகரின் புறநகர்ப் பகுதிகளில் ஒரே நேரத்தில் 250-க்கும் அதிகமான மதுபானக் கடைகள் பூட்டப்பட்டதால் மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியும் சிரமமும் அடைந்துள்ளனர்.

ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாகத் டாஸ்மாக் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment