டாஸ்மாக்கில் சமபங்கீடு முறை ரத்து: செப்டம்பர் 21 முதல் தேவைக்கேற்ப மட்டுமே சரக்கு விநியோகம்!
தமிழ்நாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்குச் சரக்குகளைப் பங்கீட்டு அனுப்பும் நடைமுறையில் நிர்வாக ரீதியாகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் ஒவ்வொரு சில்லறை விற்பனைக் கடையின் உண்மையான தேவை மற்றும் விற்பனைக் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே சரக்குகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த, மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களின் சரக்குகளை அனைத்துக் கடைகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கும் … Read more