ரயில் நிலைய வளாகங்கள் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் நோக்கில் இரயில்வே நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதன்படி, ரயில் நிலையங்களில் கண்ட இடங்களில் குப்பை போடுவோர் மற்றும் எச்சில் துப்புவோருக்கான அபராதத் தொகையை ரூ.500-ல் இருந்து ரூ.1,000-ஆக உயர்த்தி இரட்டிப்பாக்கி இரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், விதிக்கப்படும் அபராதத் தொகையைச் செலுத்த மறுக்கும் நபர்கள் மீது அலட்சியம் காட்டாமல், அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரயில்வே எச்சரித்துள்ளது.
ரயில் நிலையங்களைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி அபராத நடவடிக்கை பயணிகள் மத்தியில் விழிப்புணர்வையும் பெரும் பர பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.