அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் தன்னை ‘பாஸ்’ என்றே அழைத்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சீமான், தனது அமெரிக்கப் பயணத்தின் போது நடைபெற்ற சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டார். அங்குத் தன்னிடம் விசாரணை நடத்திய அமெரிக்க அதிகாரிகள், “உன்னை எப்படி உன் நாட்டில் இன்னும் உயிரோடு விட்டுள்ளார்கள்?” என்று வியப்புடன் கேட்டதாகக் குறிப்பிட்ட அவர், விசாரணை அதிகாரிகள் தன்னை ‘பாஸ்’ என்றே அழைத்ததாகக் கூறினார்.
மேலும், கட்சியின் கொள்கைகள் குறித்துக் கேட்ட அதிகாரிகளிடம், “சொன்னால் என் கட்சியில் சேர்வீர்களா?” என்று தான் நகைச்சுவையாகவும் தைரியமாகவும் கேட்டதாக மதுரைக் கூட்டத்தில் சீமான் பேசினார்.
அமெரிக்க அதிகாரிகளுடன் நடந்த இந்த வினோதமான உரையாடல் குறித்துச் சீமான் வெளியிட்ட இந்த அதிரடித் தகவல்கள், கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.