வங்கக்கடலில் உருவான தீவிர முரசு புயல் தற்போது சென்னைக்கு வடகிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு நகர்ந்து வருகிறது. இந்த புயல் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி மெதுவாக நெருங்கி வரும் நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்தப் புயலின் நகர்வு வேகம் மிகவும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதன் வேகம் சற்று குறைந்துள்ளது. தற்போதைய தகவல்களின்படி, இந்த தீவிர முரசு புயல் நெல்லூருக்குக் கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவிலும், ஒங்கோலுக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
புயல் கரையை நெருங்கி வருவதால் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கரையைக் கடக்கும் வேளையில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசும் மீட்புப் படையினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.