2.5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை! எண்ணூர் அருகே அதிர்ச்சி சம்பவம் – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் போராட்டம்!

சென்னை எண்ணூர் அருகே இரண்டரை வயது பெண் குழந்தைக்குப் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை ஆபத்தான நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தேசிங்கு மற்றும் அவரது மகனான ரஞ்சித் என்பவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தேசிங்கு என்பவரின் வீட்டை முற்றுகையிட்டு குழந்தையின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி குழந்தைக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Comment