வீணாகிறது விளையாட்டு மைதானங்கள்!: உதயநிதி துவக்கிய திட்டம் பயன்பாடின்றி முடக்கம்!

கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், அவர்களுக்குப் போதிய பயிற்சி வசதிகளை ஏற்படுத்தித் தரவும் 14 ஊராட்சிகளில் புதிதாக 140 விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் திட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் லட்சக்கணக்கான ரூபாய் அரசு நிதியில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு மைதானங்கள், தற்போது எவ்விதப் பயன்பாடும் இன்றி வீணாகி வருவது பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மைதானங்கள் அமைக்கப்பட்ட போதிலும், அவற்றுக்கான முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததாலும், உரிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படாததாலும் இளைஞர்கள் அங்குச் சென்று விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கும் இந்த மைதானங்கள் தற்போது புதர்கள் மண்டியும், பராமரிப்பின்றியும் பாழடைந்து வருகின்றன. மக்கள் வரிப்பணத்தில் விளையாட்டுத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்நோக்கத் திட்டம், அதிகாரிகளின் அலட்சியப் போக்காலும் முறையான தொடர் பராமரிப்பு இல்லாததாலும் முற்றிலுமாக உதவாமல் போயுள்ளது.

எனவே, பயன்பாடின்றி வீணாகும் இந்த 140 விளையாட்டு மைதானங்களையும் உடனடியாகச் சீரமைத்து, கிராமப்புற இளைஞர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment