இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றக்கூடிய முதலமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு, காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே அளித்த பதில் தற்போது அரசியல் அரங்கிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்திய முதலமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அபிஜித் தீப்கே, “தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திய மு.க.ஸ்டாலின் தான் இந்தியாவின் மிகச் சிறந்த முதலமைச்சர் (Best CM)” என்று பாராட்டிப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பல்வேறு புரட்சிகரமான மறுசீரமைப்புகளை மேற்கொண்டு அந்தத் துறைகளை அடுத்தகட்டத்திற்கு மேம்படுத்திய கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோரும் இந்தியாவில் சிறந்த முதலமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் திமுக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலினின் தலைமையை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
பிற மாநிலக் கட்சித் தலைவர் ஒருவர், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி மு.க.ஸ்டாலினை இந்தியாவின் “Best CM” எனப் புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.