ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லை!: டிரம்ப் கூற்றுக்கு ஈரான் காட்டமான மறுப்பு!

சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்துக்கு ஈரான் அரசு வலுவான மறுப்பைத் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், இந்தச் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழிப் பகுதியை அமெரிக்கப் படைகளே கண்காணித்து வருவதாக டிரம்ப் பேசியிருந்தார்.

இருப்பினும், டிரம்பின் இந்தக் கூற்றை முற்றிலும் நிராகரித்துள்ள ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பும் கட்டுப்பாடும் ஈரானின் இறையாண்மைக்கு உட்பட்டது என்றும், அதில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு ஏதுமில்லை என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

உலகின் கணிசமான அளவு கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறக்கூடிய இந்த முக்கியமான சர்வதேச ஜலசந்தி தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள இந்த முரண்பாடான கருத்துகள் மற்றும் மோதல் போக்கு, உலகப் பொருளாதார வட்டாரங்களிலும் சர்வதேச அரசியல் களத்திலும் பெரும் பரப்பரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment