“பிஎம் ஸ்ரீ பள்ளிகளின் உண்மை நிலை!”: சு.வெங்கடேசன் எம்பி சுட்டிக்காட்டிய மும்மொழிக் கொள்கையின் முரண்பாடு!

மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளில் ‘எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம்… ஆனால், அந்த மொழியைக் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள்’ என்பதே தற்போதைய நிதர்சன நிலை என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு வெளியே பிற மாநிலங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களின் குழந்தைகள், பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் தமிழைத் தங்களின் மூன்றாவது மொழியாகக் கற்க விருப்பம் தெரிவித்தாலும், அவர்களுக்குக் கற்பிக்கத் தேவையான தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய அரசு முன்வைக்கும் மும்மொழிக் கொள்கையானது நாட்டில் உள்ள அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் கொள்கையாக உண்மையிலேயே இருந்தால், அது வெறும் காகித அளவிலோ அல்லது வாக்குறுதிகளிலோ நிற்காமல் தமிழாசிரியர் நியமனத்திலும் வெளிப்படையாகப் பிரதிபலிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘சமஸ்கிருதத்துக்கு ஒரு நீதி… தமிழுக்கு ஒரு நீதியா? – என்னங்க சார் உங்க சட்டம்..?’ என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியான கட்டுரையில் சு.வெங்கடேசன் முன்வைத்துள்ள இந்த விமர்சனம், மத்திய அரசின் கல்விக்கொள்கை மற்றும் மாநில மொழிகளின் உரிமை குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Comment