“தொண்டர்களை விரட்டிய திருமாவளவன்”: உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நடந்த சலசலப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநாட்டில், தொண்டர்களின் கட்டுப்பாடற்ற அட்டகாசத்தால் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மிகுந்த அதிருப்தியும் கோபமும் அடைந்தார். மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்ருந்த ரேம்ப் வாக்கில் அவர் நடந்து வந்தபோது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கழுத்தில் துண்டு போட வந்த தொண்டர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அவரது தலையிலேயே துண்டைப் போட்டதால் மேடையில் பெரும் சலசலப்பும் கூச்சலும் ஏற்பட்டது.

தொண்டரின் இந்த அலட்சியமான செயலால் மிகுந்த ஆத்திரமடைந்த திருமாவளவன், சற்றும் யோசிக்காமல் சம்பந்தப்பட்ட தொண்டரை முதுகில் அடித்து, கடும் கோபத்துடன் அங்கிருந்து விரட்டியடித்தார். மாநாட்டுத் திடலில் ஆயிரக்கணக்கான கட்சியினரும் பொதுமக்களும் திரண்டிருந்த சூழலில், தலைவர் திருமாவளவன் மேடையிலேயே தொண்டரை அடித்து விரட்டிய இந்தச் சம்பவம் கூட்டத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

கட்சியின் முக்கிய மாநாட்டில் தலைவரின் உணர்ச்சிவசப்பட்ட இந்தச் செயல் தொடர்பான வீடியோ மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மாநாட்டின் கட்டுப்பாடுகள் மற்றும் தொண்டர்களின் ஒழுங்கீனம் குறித்து விசிக நிர்வாகிகள் வட்டாரத்தில் இச்சம்பவம் காரசாரமான விவாதங்களையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment