2026-ஆம் ஆண்டின் முதலாவது முழு சூரிய கிரகணம் இன்று வெகு விமரிசையாக நிகழ்கிறது. வானியல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அரிய வானியல் நிகழ்வு, இந்திய நேரப்படி இன்று இரவு 9:04 மணிக்குத் தொடங்குகிறது.
தொடர்ந்து படிப்படியாக நகர்ந்து இரவு 11:16 மணி அளவில் சூரியனை நிலவு முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணமாக (Total Solar Eclipse) மாறவுள்ளது.
எனினும், இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழ்வதால், இந்தியாவில் இருக்கும் மக்களால் இதனை நேரடியாகக் வெறும் கண்ணாலோ அல்லது கருவிகள் மூலமாகவோ காண முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆனால், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் குறிப்பாகக் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வாழும் மக்கள் இந்த அரிதான முழு சூரிய கிரகண நிகழ்வைக் மிகத் தெளிவாகக் கண்டு ரசிக்க முடியும். இந்தியாவில் இதைக் காண முடியாத சூழல் இருந்தாலும், உலகின் பல்வேறு முன்னணி வானியல் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் யூடியூப் தளங்கள் நேரலை செய்யவுள்ளதால், இணையம் வாயிலாக இந்திய வானியல் பிரியர்கள் இந்த அபூர்வ நிகழ்வைக் கண்டு மகிழலாம்.