“நிதியை நிறுத்திட்டாங்க…”: தவெக அரசை விமரித்து சென்னை மேயர் பிரியா ஆவேசம் – கருப்புச் சட்டை அணிந்து கவுன்சிலர்கள் போராட்டம்!

சென்னை மாநகராட்சியின் பல்வேறு நிதிகளைத் தமிழகத்தில் ஆளும் தவெக அரசு நிறுத்தி வைத்துள்ளதாகச் சென்னை மேயர் பிரியா கடும் குற்றச்சாட்டையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “தவெக ஆட்சியில் சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அத்தியாவசியப் பணிகளைத் திட்டமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக மாநகராட்சி பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, பல கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் முடக்கப்பட்டுள்ளன” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், மாநகராட்சியின் மேம்பாட்டு நிதியான ரூ.60 லட்சம் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து முதலமைச்சருக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசுக்குத் தங்களின் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக மேயர் மற்றும் கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

இப்போராட்டத்திற்குத் தவெக கூட்டணியில் உள்ள கவுன்சிலர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகக் கூறிய மேயர் பிரியாவின் இந்த அதிரடிப் பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

Leave a Comment