‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் உடனான சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு மேடையைக் கலகலப்பாக்கினார்.
விழாவில் பேசிய அவர், “நான் ஜேசன் சஞ்சய்க்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது, முதல்வர் விஜய் எனக்கு போன் செய்து, ‘நண்பா ரொம்ப நன்றி’ என்றார்; உண்மையாகவே நான் அதை எதிர்பார்க்கவில்லை, அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும் ஜேசன் சஞ்சய் குறித்துப் பேசிய அவர், “சஞ்சய்க்கு என்னை பிடித்திருக்கிறது என்பது எனக்குப் பெரிய ஆச்சரியம்; ‘என்னடா உங்க வீட்ல இவ்வளவு பெரிய ஆள் இருக்கும்போது என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ற?’ என்று நான் சஞ்சயிடமே கேட்டேன்” எனக் கூறி அரங்கத்தை அதிர வைத்தார்.
திரைத்துறையில் முன்னணி கதாநாயகனாகவும் மக்கள் செல்வனாகவும் வலம் வரும் விஜய் சேதுபதி, தற்போது இயக்குநராகப் பரிணமித்துள்ள விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மீது வைத்துள்ள அன்பையும், முதல்வர் விஜய்யின் எளிமையான பண்பையும் மேடையில் வெளிப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்ட இந்த ‘பத்தா’ பட இசை வெளியீட்டு விழா நிகழ்வில், விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.