“ஒப்புவித்தல் போட்டி!”: தவறான கருத்துக்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்துள்ளார் விஜய் – உதயநிதி கடும் தாக்கு!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பேரவையில் நடைபெற்றது ஒரு “ஒப்புவித்தல் போட்டி” போல இருந்தது எனக் கேலி செய்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “சட்டசபையில் வியாழக்கிழமை அன்று நாங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதைப் போல முதல்வர் எப்படி ஓடினாரோ, அதேபோல இன்று ஏதோ ஒரு பேப்பரைப் பார்த்து மனப்பாடம் பண்ணிவிட்டு வந்து ஒப்புவித்தல் போட்டியைப் போலத் தவறான கருத்துக்களை அவையில் ஒப்புவித்துள்ளார்” என்று மிகக் காரசாரமாகக் குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உண்மையான, நேரடியான பதில்களைத் தராமல், தயாரிக்கப்பட்ட தவறான தகவல்களை மட்டுமே முதல்வர் வாசித்துக் காட்டியதாக அவர் சாடினார்.

முதலமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்த சூழலில், செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்த விமர்சனம், சட்டமன்ற மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Comment