“என் அம்மா ஒரு விவசாயி!”: சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உருக்கம் – சிறுவயது சோகத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சி!

சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தனது சிறுவயது வாழ்க்கைப் போராட்டத்தையும், தனது தாயாரின் மறைவு குறித்த சோகத்தையும் பகிர்ந்து அரங்கை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “எனது அம்மா ஒரு விவசாயி. எனக்கு 6 வயதாக இருந்தபோதே அவர் தற்கொலை செய்துகொண்டார். அதனால் விவசாயிகளின் கஷ்டங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களும் எனக்கு மிக நெருக்கமாகத் தெரியும்” என மிக உருக்கமாகத் தெரிவித்தார்.

உழவர் சமூகத்தின் கஷ்டங்களை நேரில் கண்ட அனுபவமும், தாய் இழப்பின் வலியும் தான் தமக்கு எளிய மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்குச் சேவை செய்யவும் தூண்டுகோலாக உள்ளது என்பதையும் அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சரின் இந்த நெகிழ்ச்சியான பேச்சு மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களிலும் தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment