தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை விவரங்களை குறுஞ்செய்தி (SMS) மூலமாகப் பெறும் நடைமுறை வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்குத் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தச் சுற்றறிக்கையில், கடைகளின் விற்பனை மற்றும் சரக்கு இருப்பு விவரங்களை இனி தனியாகச் பணியாளர்கள் SMS மூலம் அனுப்ப வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய “End-to-End” கணினி அமைப்பு மூலம் விற்பனை மற்றும் இருப்பு விவரங்களை உடனுக்குடன் துல்லியமாக அறிய முடிவதால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நவீன கணினிமயமாக்கல் நடவடிக்கை மூலம் டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகள் மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் விரைவாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வழக்கமாக குறுஞ்செய்தி அனுப்புவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு இந்தப் புதிய முறை முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பப்படுகிறது.