“விஜய்யின் 3 வாக்குறுதிகளும் தோல்வி!”: மூத்த பத்திரிகையாளர் SP லட்சுமணன் கடுமையான சாடல்!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே முதலமைச்சர் விஜய் அளித்த வாக்குறுதிகள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இச்சூழலில், பதவி ஏற்கும் போது முதலமைச்சர் விஜய் அளித்த 3 முக்கியமான வாக்குறுதிகளும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் SP லட்சுமணன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

பத்திரிகையாளர் SP லட்சுமணன் தனது அரசியல் அலசலில் தெரிவித்ததாவது: “முதலாவதாக, ஊழல் ஒழிப்பு என்பதில் அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது; அமைச்சர்கள் மீண்டும் லஞ்சம் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டாவதாக, ‘ஒரே பவர் செண்டர்’ என்று கூறியது 100% பொய்யாகிவிட்டது.

முதலமைச்சர் விஜய்யைத் தாண்டியும் பல அதிகார மையங்கள் உருவெடுத்து இயங்கி வருகின்றன, அவர்களுக்குள்ளேயே அதிகாரப் போட்டியும் சண்டையும் நடப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மூன்றாவதாக, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை என்பதும் சுத்தமாக இல்லை, இங்கு நடக்கும் அனைத்துக் காரியங்களும் மூடுமந்திரமாகவே வைக்கப்பட்டுள்ளன.”

முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியதிகாரப் போக்கு மற்றும் வாக்குறுதிகளின் நிலை குறித்து மூத்த பத்திரிகையாளர் SP லட்சுமணன் முன்வைத்துள்ள இந்த 3 கட்டக் குற்றச்சாட்டுகள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் புயலையும் சூடான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

Leave a Comment