“விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கலாம்!”: எம்.எல்.ஏ.-க்களுக்குக் கார் வழங்கும் அறிவிப்புக்கு பிரேமலதா விஜயகாந்த் சாடல்!
சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதிப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசு சார்பில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் எனப் பேரவையில் அறிவிக்கப்பட்டதற்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கடுமையான கண்டனத்தையும் விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார். மக்கள் வரிப்பணத்தைச் சரியான முன்னுரிமைகளுக்குப் பயன்படுத்தாமல், ஏற்கனவே வசதியோடு இருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மேலும் சலுகைகளை அள்ளித் தருவது எந்த விதத்தில் நியாயமாகும் என்று அவர் சாடியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தமிழகத்தில் ஏற்கனவே 90% எம்.எல்.ஏ.-க்களிடம் சொந்தமாகக் கார்கள் மற்றும் … Read more