வெளியான ரகசிய கடிதம்: சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Chief Minister Vijay writes to the Prime Minister

சென்னை விமான நிலையத்தின் மோசமான பராமரிப்பு மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, அதன் நிருவாகத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து (AAI) நீக்கித் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் எழுதிய ரகசிய கடிதம் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு அளவில் போக்குவரத்து மையமாகத் திகழும் சென்னை விமான நிலையத்தில் போதிய பராமரிப்பின்மை, கூரை இடிந்து விழுதல் மற்றும் நிருவாகச் சீர்கேடுகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் … Read more

ரஜினிகாந்த் வீட்டின் முன்புறத்தில் ‘பாபா’ முத்திரை சின்னம்: ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் வைரல்!

The 'Baba' symbol displayed at the entrance of Rajinikanth's house

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்புறத்தில் புதிதாகப் பிரம்மாண்டமான ‘பாபா’ முத்திரை சின்னம் நிறுவப்பட்டு இடம்பெற்றுள்ளது. அவரது அடையாளமாக விளங்கும் இந்த யோக முத்திரை வடிவிலான சிலை, அவரது வீட்டின் நுழைவாயில் சுவரில் பதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பெரும் பேச்சுப் பொருளாகவும் ஆர்வமாகவும் மாறியுள்ளது. ரஜினிகாந்தின் ஆன்மீகக் குறியீடாகவும், ‘பாபா’ திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இந்த முத்திரை, அவரது கொள்கை மற்றும் வாழ்வியல் குறியீடாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது இல்லத்தின் … Read more

கிடைத்தது தீர்வு: கோவை ‘ஒரு ரூபாய் இட்லி’ பாட்டிக்கு மாதம்தோறும் இரண்டு சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை!

Two cylinders every month for Coimbatore's 'One-Rupee Idli' Grandma

கடந்த இரண்டு மாதங்களாக இலவச கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் தவித்துவந்த கோவை ‘ஒரு ரூபாய் இட்லி’ பாட்டிக்கு, இனி மாதந்தோறும் இரண்டு சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் பசி போக்கும் நோக்கில் பல ஆண்டுகளாக வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து நாடு முழுவதும் கவனம் ஈர்த்த அந்த மூதாட்டிக்கு, கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்ட நிருவாக ரீதியான சிக்கல்களால் உணவகம் நடத்துவதில் … Read more

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம்!

Kolathur MLA V.S. Babu

சுவாசக் கோளாறு காரணமாகக் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தீவிர மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், வழங்கப்படும் சிகிச்சைகளுக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொகுதிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சட்டமன்ற உறுப்பினருக்குத் திடீரென ஏற்பட்ட … Read more

“மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை”: அரசின் மீதான சோஃபா விமர்சனம் குறித்துத் திருமாவளவன் விளாசல்!

Thirumavalavan

ஆளும் தவெக அரசின் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் சோஃபா பற்றிய விமர்சனம் மக்களால் ஏற்கனவே புறந்தள்ளப்பட்ட ஒன்று என்றும், இத்தகைய தேவையற்ற விமர்சனங்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யாராவது இந்தக் காலத்தில் போய் சோஃபாவை வைத்து காசு கொடுப்பார்களா? சினிமா படத்தில் ஒரு காட்சியில் அது வந்தது. அதை இந்த அரசின் மீது வைக்கப்படும் பெரிய விமர்சனமாக எண்ணிக் … Read more

கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டம்: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்!

Cooum River Restoration Project

சென்னையின் முதன்மை நீர்நிலைகளில் ஒன்றான கூவம் ஆற்றை மறுசீரமைக்கும் திட்டம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூவம் ஆற்றைத் தூய்மைப்படுத்துதல், கழிவுநீர் கலப்பதைத் தடுத்தல் மற்றும் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தி அழகிமைத்தல் உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பது குறித்து மூத்த அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அத்துடன், இத்திட்டத்திற்கான முதற்கட்ட மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் … Read more

ரூ.2.78 கோடி பணப்பரிமாற்ற வழக்கு: முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மருமகனிடம் விசாரணை நடத்தக் கேரள உள்துறை முடிவு!

Chief Minister Pinarayi Vijayan

தனியார் நிறுவனத்திடமிருந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் ரூ.2.78 கோடி பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது மருமகனும் அமைச்சருமான முகமது ரியாஸிடம் தீவிர விசாரணை நடத்தக் கேரள உள்துறை முடிவு செய்துள்ளது. தனியார் கனிம நிறுவனத்திடமிருந்து சேவை வழங்காமலேயே வீணா விஜயனின் ஐடி நிறுவனம் பெரும்தொகையைப் பணமாகப் பெற்றதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தென்னிந்திய அரசியல் களத்தில் ஏற்கனவே பெரும் புயலைக் கிளப்பியிருந்தன. இந்நிலையில், இந்த நிதி … Read more

சென்னை மற்றும் வட மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Moderate rain with thunder and lightning

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய வட மாவட்டங்களில் நாளை (செப்டம்பர் 23) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னையின் பல பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்புறப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய திடீர் மழை பெய்யக்கூடும் என்பதால் … Read more

யார் இந்த கணேசன்?: ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைதானவர் குறித்துக் காவல்துறை பரபரப்பு விளக்கம்!

Gem Veeramani is someone who was arrested in a POCSO case

ஜெம் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில் கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாகக் காவல்துறை விரிவான விளக்கமளித்துள்ளது. கைதான கணேசன், வீரமணியின் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த ஊழியர் ஆவார். சிறுமி தொடர்பான ஆபாச வீடியோ குறித்துத் தெரிந்திருந்தும், அதுபற்றிக் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கத் தவறிய காரணத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தச் சிறுமியின் ஆபாச வீடியோவை கணேசனுக்கு அனுப்பி வைத்தது யார் என்பது குறித்தும் காவல்துறையினர் … Read more

ஆசிய விளையாட்டு தங்கப் பதக்க சாதனை: மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு!

Rs. 75 lakh incentive for cricketer Kamalini

ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய அணியில் இடம்பெற்ற மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச அரங்கில் அவரது இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக, தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தென் மாவட்டத்தின் எளிய பின்னணியிலிருந்து உருவெடுத்து, சர்வதேச அளவிலான டி20 … Read more