KN.நேரு இல்லத்தில் அன்பில் மகேஷ்!: திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையால் திமுa நிர்வாகிகள் திரண்டு பரபரப்பு!

Anbil Mahesh at KN Nehru's residence.

திருச்சியில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து இந்த அதிரடி ரெய்டு நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கே.என். நேருவின் வீட்டின் முன்பு பெருமளவில் திரண்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், கட்சியின் … Read more

“எச்சரிக்கை!”: நவம்பர் 1-க்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Madras High Court

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப்பலகை வைக்கப்பட வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ் மொழியைப் பயன்பாட்டில் ஊக்குவிக்கும் வகையிலும், வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவை வழங்கியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் தமிழ் பெயர்ப்பலகை வைக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட வணிகர்கள் மீது அதிகாரிகள் தரப்பிலிருந்து கடுமையான … Read more

“கேள்வி கேட்டதால் ரெய்டு!”: DVAC சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அதிரடி புகார்!

kn nehru

தனது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், சோதனையின் முடிவில் ஒரேயொரு கோப்பு மட்டுமே அதிகாரிகளால் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசு மீது சட்டமன்றத்தில் தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருவதாலேயே பழிவாங்கும் நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கித் தன் பக்க நியாயத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், … Read more

இசக்கி சுப்பையா ராஜினாமா வாபஸ்? சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அளித்த முக்கிய விளக்கம்!

Isakki Subbiah withdraws resignation.

தமிழக அரசியலில் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெறுவது தொடர்பாக இசக்கி சுப்பையா அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அளித்துள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர், இசக்கி சுப்பையா அளித்துள்ள கடிதம் தற்போது தனது தீவிர பரிசீலனையிலும் ஆய்விலும் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் … Read more

ஊழல்வாதிகளுக்குத்தான் பாதுகாப்பு இல்லை – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி தாக்கு!

It is the corrupt who have no protection.

வரும் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பிரதான திராவிடக் கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் மிக காரசாரமான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தற்போதைய தவெக ஆட்சியில் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார். “தமிழகத்தில் ஏழை, எளிய பொதுமக்களுக்குத் தலைசிறந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது; இங்கு யாருக்கு பாதுகாப்பு இல்லை என்றால், ஊழல்வாதிகளுக்கு மட்டும்தான் … Read more

“ஓடாதே என்றவர் ஓடிவிட்டார்!”: பேரவையில் முதல்வர் விஜயைச் சாடிய உதயநிதி!

cm vijay vs udhayanithi

சட்டமன்றத்தில் நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் இன்றே பதில் சொல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், “திங்கட்கிழமை பதில் சொல்கிறேன்; யாரும் ஓடாமல் இருங்கள்” என்று சொல்லிவிட்டு அவரே ஓடிப்போய்விட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “அவர் சொன்ன வார்த்தையைத் தான் நான் திருப்பிச் சொல்கிறேன்; முதலமைச்சர் தைரியமாகப் பதில் சொல்லட்டும், அதற்காகத் தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார். மேலும் தவெக ஆட்சியில் காவல்துறை மிகவும் சீர்கெட்டுப் … Read more

“கோவில் கணக்குகள் அம்பலம்!”: 10 முக்கிய விவரங்களை பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்!

Temple accounts exposed

கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வரவு செலவு கணக்குகள் உட்பட பத்து வகையான மிக முக்கியமான விவரங்களைப் பக்தர்கள் எளிதில் பார்க்கும் வகையில் அந்தந்தக் கோவில் வளாகங்களில் வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில்களின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள், நகை மற்றும் அசையும், அசையாச் சொத்துக்களின் முழு விவரங்கள், தினசரி மற்றும் … Read more

“தவறாக பேசி விட்டேன்!”: ஜே.கே. டயர்ஸ் தொழிற்சாலை சர்ச்சை குறித்து தவெக எம்.எல்.ஏ தாஹிரா ஓபன் விளக்கம்!

TVK MLA Tahira

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்காத ஜே.கே. டயர்ஸ் ஆலையை மூடக்கோரி சட்டப்பேரவையில் பேசியது தொடர்பாகத் எழுந்த விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ தாஹிரா நேரில் விளக்கமளித்துள்ளார். சட்டமன்றத்தில் விவாதத்தின் போது பேசிய அவர், ராணிப்பேட்டையில் இல்லாத தொழிற்சாலையின் பெயரைக் குறிப்பிட்டு அத மூட வேண்டும் எனப் பேசியது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளானது. இது குறித்துப் பேட்டியளித்த எம்.எல்.ஏ தாஹிரா, “எனக்கு உரை தட்டச்சு செய்து கொடுத்தவர்கள் பெயரைக் தவறாகக் குறிப்பிட்டதால், அதை … Read more

“அரசியல் பேசாதீர்!”: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டின் முன் பேனர்!

PMK founder Ramadoss

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தீவிர அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகி ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ள சூழலில், அவரைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் யாரும் அரசியல் பேசக் கூடாது எனத் திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள அவரது தோட்டத்து இல்லத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அரசியல் துறவறம்” என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருக்கும் அந்த அறிவிப்புப் பலகையில், தினமும் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

“கஜானா காலி..”: கஜானாதான் இருக்கு, அதுல ஒன்னும் இல்ல! – தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Minister Anand's speech

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஆனந்த், மாநில அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்து வெளிப்படையாகப் பேசி ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டக் களத்தில் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “முந்தைய ஆட்சியாளர்கள் கஜானாவையே காலி பண்ணிட்டு போயிட்டாங்க; இப்போது கஜானாதான் இருக்கு, ஆனா அதுல ஒன்னும் இல்ல. இருந்தாலும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் முற்றிலும் நியாயமானதுதான்” என்று தெரிவித்தாா். தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரக் … Read more