மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை: விஜய் பெற்ற வெற்றி குறித்து நடிகர் நானி உருக்கமான பேச்சு!

தமிழக முதல்வர் விஜய் அடைந்துள்ள மகத்தான வெற்றி என்பது வெறும் ரசிகர்களின் எண்ணிக்கை அல்லது திரைப்பட வசூலைப் பொறுத்தது அல்ல; மாறாக, பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு மக்களுடன் குடும்பம் போன்ற நெருங்கிய உறவை உருவாக்கியதன் மூலம் கிடைத்த ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடு என்று தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் நானி புகழாரம் சூட்டியுள்ளார்.

‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசி அவர், “தமிழ்நாட்டு மக்கள் விஜய் சார் மீது வைத்திருக்கும் அளப்பரிய நம்பிக்கை இப்போது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர் வழிநடத்தும் இந்த ஆட்சி மூலம் அடுத்த சில ஆண்டுகள் மக்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனத் தனது வாழ்த்துகளையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த விஜய், அரசியல் களத்தில் இறங்கி மக்கள் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், தென்னந்தியத் திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நாயகர்கள் பலரும் அவரது இந்தப் பரிணாம வளர்ச்சி குறித்துத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், விஜய்யின் மக்கள் செல்வாக்கு மற்றும் அவர் உருவாக்கியுள்ள நம்பிக்கைப் பிணைப்பு குறித்து நடிகர் நானி திறந்த மனதுடன் பேசியுள்ளது ஊடகங்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

கலைத் துறையையும் தாண்டி, ஒரு தலைவனாக மக்கள் மனதில் விஜய் பெற்றிருக்கும் இந்த நன்மதிப்பு, வரவிருக்கும் காலங்களில் அவரது அரசு நிர்வாகத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் என்றும் அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

Leave a Comment