அஜித் வந்தால் விஜய் அவ்வளவுதான்: திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேட்டி!

நடிகர் அஜித் குமார் அரசியலில் களமிறங்கினால் தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துவிடும் என அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அஜித் அரசியலுக்கு வந்தால் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே, மக்கள் வரிப்பணத்தில் லண்டன் சென்று, ‘நீ எனக்குப் போட்டியாக வந்துவிடாதே’ என்று அஜித்திடம் நேரில் சொல்லிவிட்டு விஜய் வந்திருக்கிறார்” எனப் பகிரங்கக் குற்றச்சாட்டைக் முன்வைத்தார்.

மேலும், சமீபத்தில் கார் பந்தய நிகழ்வை விஜய் தொடங்கி வைத்தது அன்பின் காரணமாக அல்ல, மாறாக அஜித்தின் அரசியல் வருகையைத் தடுப்பதற்கான அரசியல் கணக்கு என்றும் அவர் விமர்சித்தார்.

தமிழக அரசியலில் தவெக தலைவரான விஜய்யின் நகர்வுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில், அதிமுக தரப்பில் இருந்து எழுப்பப்பட்டுள்ள இந்த நேரடித் தாக்குதல் அரசியல் களத்தில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது.

திரைத்துறையிலும் அரசியலிலும் விஜய் – அஜித் ரசிகர்களிடையே எப்போதும் நிலவும் போட்டி மனப்பான்மையை மையமாகக் கொண்டு, அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Leave a Comment