திமுக தான் காரணம்! தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பிரச்சினைக்கு திமுகவே முழு பொறுப்பேற்க வேண்டும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசம்!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எஸ்.ஐ.ஆர். (SIR) பிரச்சினைக்குத் திமுக அரசுதான் முழுமையான காரணம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இவரது இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைக்கோ, “தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பிரச்சினைக்குத் திமுகதான் காரணம்; எஸ்.ஐ.ஆர். பணி நடைபெற்றபோது திமுக நிர்வாகிகள்தான் உடன் சென்றனர்” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “இதுவரை கூட்டணித் தர்மத்தைக் காப்பதற்காக நாங்கள் பல விஷயங்களைப் பொறுத்துக்கொண்டு எதையும் பேசாமல் இருந்தோம்; ஆனால், எஸ்.ஐ.ஆர். பிரச்சினைக்குத் திமுகதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்று மிகக் காரசாரமாக வலியுறுத்தினார்.

கூட்டணிக்குள் நிலவும் இந்த முரண்பாடுகளும், எதிர்க்கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. வைக்கோவின் இந்தப் பேட்டி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment