தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்பதையே இன்னும் நம்பவில்லை என்றும், எந்தக் கேள்வி கேட்டாலும் ‘திமுக ஆட்சியில் நடந்தது’ என்று பழி போடுவதை மட்டுமே வேலையாகக் கொண்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.
திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ஆளும் தவெக அரசின் நிருவாகப் போக்கையும் முதலமைச்சரின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார். “இந்த அரசும், முதலமைச்சரும், அமைச்சர்களும் தங்களது நிருவாகத் தோல்விகளையும் வாக்குறுதி மீறல்களையும் மறைப்பதற்காக எதற்கெடுத்தாலும் முந்தைய திமுக ஆட்சியின் மீது பழி போடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “ஆட்சியாளர்களின் இந்தச் சாக்குப்போக்குகளையும் பொறுப்பற்ற பதில்களையும் பொதுமக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றும் எச்சரித்தார்.
ஆட்சிப் பொறுப்பேற்று பல மாதங்கள் கடந்த பின்னரும் நிருவாகச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து எதிர்க்கட்சியை மட்டுமே குறை கூறி அரசியல் செய்வது தவெக அரசின் முதிர்ச்சியற்றத் தன்மையைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
நிருவாக ரீதியான பொறுப்பேற்பைத் தவிர்த்துப் பழிபோடும் அரசியலை ஆளும்கட்சி முன்னெடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு, தமிழக அரசியல் களத்தில் மீண்டும் காரசார விவாதத்தைத் தூண்டியுள்ளது.