சவரனுக்கு ரூ.200 சரிவு! – சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
ஆபரணத் தங்கத்தின் விலை தினமும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூபாய் 200 குறைந்துள்ளது, ஆபரண நகைகள் வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குச் சிறிய அளவிலான ஆறுதலை அளித்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1,09,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூபாய் 13,640-க்கு விற்பனையாகி வருகிறது. … Read more