விஞ்ஞான முறையில் பத்திரப்பதிவு: ஸ்ரீரங்கம் கோவில் நில ஆக்கிரமிப்பில் திமுகவை அதிரடியாகச் சாடிய அமைச்சர் ரமேஷ்!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான பெருமதிப்புள்ள நிலங்களை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிகவும் “விஞ்ஞான முறையில்” பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய நிர்வாகச் சீர்கேடுகளையும் ஊழல்களையும் அம்பலப்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தார். “இதற்கு முன்னால் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளின் மறைமுக உதவியின்றி, ஒரு திமுக பகுதி நிர்வாகியால் மட்டுமே இவ்வளவு பெரிய அளவில் பத்திரப்பதிவு செய்திருக்க முடியாது” என அவர் பகிரங்கமாகச் சாடினார்.

கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் முந்தைய அரசு காட்டிய அலட்சியப்போக்கையும், ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்குச் சாதகமாக அதிகார வர்க்கம் செயல்பட்ட விதத்தையும் சுட்டிக்காட்டிய அவர், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

தவெக அரசு அமைந்தது முதல் ஆன்மிகச் தலங்களின் சொத்துக்களையும் கோவில் நிலங்களையும் மீட்டெடுப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் சூழலில், அமைச்சர் ரமேஷின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் நில விவகாரத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சரையும் அதிகாரிகளையும் நேரடியாகக் குறிவைத்து முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு, ஆளும்கட்சியான தவெக-விற்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையிலான அரசியல் மோதலை மேலும் உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

Leave a Comment