அரசியலுக்குள் நுழையும் போது “நான் இனிமேல் நடிக்க மாட்டேன்” என்று துணிச்சலான முடிவை எடுத்த ஒரே நபர் நடிகர் விஜய் தான் என்று இயக்குநர் சுப்பிரமணிய சிவா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்துப் பேசிய அவர், “திரையுலகில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கூட தனது 60 வயதிற்கு மேல் தான் இனிமேல் நடிக்கக் கூடாது என்கிற முடிவை எடுத்தார்.
ஆனால், நடிகர் விஜயோ தனது திரையுலக வாழ்க்கையின் உச்சகட்டப் புகழில் இருக்கும் போதே, சினிமா வாழ்க்கையையும் கோடிக்கணக்கிலான வருமானத்தையும் அறவே விட்டுவிட்டு, முழுமையாக மக்களை மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்திருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினார்.
சினிமா துறையில் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நடிகர், தன்னுடைய வெற்றிகரமான நடிப்புத் தொழிலை முற்றிலும் கைவிட்டுவிட்டுப் பொதுவாழ்க்கைக்கு வருவது என்பது சாதாரண விஷயமல்ல என்றும், அதற்கு மிகப்பெரிய துணிச்சலும் மக்கள் மீதான அளப்பரிய நம்பிக்கையும் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திரையுலகை விட்டு விலகி முழுநேர அரசியலில் களம் கண்டுள்ள விஜயின் இந்த அதிரடி முடிவை ஒப்பிட்டு இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசியுள்ள கருத்துகள், தற்போது சமூக வலைத்தளங்களிலும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களிலும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.