மாற்றுக் கட்சியினரை வாரி அணைக்கும் தவெக: தமிழக அரசியலில் விஜய் நடத்தும் அடுத்தகட்ட காய்நகர்த்தல்!

தமிழக அரசியலில் தடம் பதித்து, குறுகிய காலத்திலேயே பிரதான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தற்போது மாற்றுக்கட்சி நிர்வாகிகளைத் தன்வசம் இழுக்கும் அடுத்தகட்டத்தை தொடங்கியுள்ளது.

அதிமுகவின் கலைப்பிரிவு செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவருமான ஆர்.வி. உதயகுமார். திரையுலகிலும் சரி, அதிமுகவின் பிரச்சாரப் பிரிவிலும் சரி, தனக்கெனத் தனி முத்திரை பதித்த இவர், தற்போது தவெக-வில் இணைந்துள்ளார்.

ஆர்.வி. உதயகுமாருடன் இணைந்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கோமதி சீனிவாசன் தவெக-வில் இணைந்து இருக்கிறார். தவெக வெறும் இளைஞர்களை மட்டுமே நம்பியிருக்கும் கட்சி அல்ல, மாறாகப் பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்களையும் உள்ளடக்கிய முதிர்ச்சியான இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவர்களின் வருகை கட்சியின் மூத்த நிர்வாகக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் எனத் தொண்டர்கள் நம்புகின்றனர்.

அதிமுகவிலிருந்து மட்டுமல்லாமல், பிற அரசியல் கட்சிகளில் இருந்தும் பல மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் மற்றும் தங்களின் ஆதரவாளர்களுடன் வந்து தவெக-வில் இணைந்துள்ளனர். சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், புதிய உறுப்பினர்களைக் கட்சித் தலைமை முறைப்படி வரவேற்று, கட்சியின் உறுப்பினர் அட்டைகளையும், பொன்னாடைகளையும் வழங்கி கௌரவித்தது.

அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, தவெக-வின் இந்தத் தீவிர சேர்க்கைப் படலம், வரும் காலங்களில் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணித்துள்ளனர். குறிப்பாக, அதிமுக மற்றும் பிற திராவிடக் கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களுக்குத் தவெக ஒரு சிறந்த மாற்றாக உருவெடுத்து வருகிறது.

ஒட்டுமொத்தத்தில், ஆர்.வி. உதயகுமார், மன்சூர் அலிகான் மற்றும் கோமதி சீனிவாசன் உள்ளிட்டோரின் இந்த அதிகாரப்பூர்வ இணைப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். வரும் நாட்களிலும் இன்னும் பல முக்கியப் புள்ளிகள் விஜய்யின் பின்னால் அணிவகுக்கக் காத்திருக்கிறார்கள் என்பதே தற்போதைய நிலவரம்.

Leave a Comment