தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான குடும்ப நல வழக்கு தொடர்பாக வெளியாகி வரும் தகவல்கள், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மீண்டும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், மனைவியால் தொடரப்பட்ட விவாகரத்து மனு திரும்பப் பெறப்பட உள்ளதாகப் பரவி வரும் செய்திகள் பொதுமக்களிடையே புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 26 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, கருத்து வேறுபாடுகள் காரணமாக நீதிமன்றப் படிகளை ஏறிய இந்தத் தம்பதியின் விவகாரம், கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பெரும் அரசியல் பேசுபொருளாக உருவெடுத்தது.
தற்போது முதல்வர் விஜய்யின் பொறுப்புகள் மற்றும் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, இரு வீட்டார் மற்றும் வழக்கறிஞர்களின் தொடர் பேச்சுவார்த்தையின் பலனாகச் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் திரும்பப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்போ அல்லது நீதிமன்றத்தின் இறுதி உத்தரவோ இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளை ஒட்டுமொத்தத் தமிழகமும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.