பகுத்தறிவுச் சுடர் தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்: தந்தை பெரியார் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!

M.K. Stalin on Thanthai Periyar's birthday

தமிழர் தலைமுறை தலைநிமிர்ந்து வாழ பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்குப் புரட்சி வணக்கம் செலுத்தி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல தலைமுறைகள் ஆதிக்கத்திற்குப் பணிந்து கிடந்த சூழலில், ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய அசாத்தியமான சமூகப் புரட்சியைக் கண்டது. அதைத் தொடர்ந்து வந்த பல தலைமுறைகள் அந்தப் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட மாபெரும் சமூக மாற்றங்களைக் கண்டு வருகின்றன. இருப்பினும், சமூகத்தில் நிலவும் … Read more

சர்க்கார் பதாகை மட்டுமே பிரச்சினை: சீமான் காரசாரம்!

seeman

சென்னையில் எந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டினாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்றும், சொந்த ஊரிலேயே அகதியாக வாழக்கூடிய சூழலை நாம் அனுமதிக்க முடியாது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “திரைப்பட விளம்பரத்திற்காக வைக்கப்பட்ட ‘சர்க்கார்’ படப் பதாகையைக் கிழித்தது மட்டுமே உங்களுக்குப் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது. ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த மேகமலைப் பிரச்சினையைப் பற்றி உங்களுக்கு … Read more

ரூ.2,000-க்கு மேலான UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம்: மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

UPI transactions exceeding ₹2,000

மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தனிநபர்கள் தங்களுக்குள் மேற்கொள்கின்ற சாதாரண டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படாது. இருப்பினும், ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு மற்றும் எரிபொருள் போன்ற குறிப்பிட்ட வணிகப் பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகளுக்குக் ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2,000-க்கு மேற்பட்ட பிற வர்த்தக ரீதியிலான UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதக் கட்டணமும், அதிகபட்ச வர்த்தகக் கட்டணமாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.300 வரை வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப் … Read more

தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல்: முன்னாள் அமைச்சர் மகேஷ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு!

anbil magesh

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் தர உயர்வு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, திமுக ஆட்சிக் காலத்தில் பெருந்தொகையை வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது. தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி வழங்குவதற்காகத் தரகர்கள் மூலம் பல கோடிகளைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் தீவிர … Read more

ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்றுங்கள்: புதிய தலைமைச் செயலக திட்டத்திற்கு சீமான் கண்டனம்!

Omandurar Hospital

தமிழக அரசுக்கு புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டால், தற்போது இயங்கி வரும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டு, அந்த வளாகத்திலேயே தலைமைச் செயலகத்தை அமைத்துக் கொள்ளட்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மாநிலத்தின் பொருளாதார நிலைமை சீராக இல்லாத சூழலில், மீண்டும் மீண்டும் கடன் வாங்கி, வாங்கிய கடனுக்குக் வட்டி மட்டுமே செலுத்தி … Read more

இடைத்தேர்தலால் மக்கள் வரிப்பணம் வீணாகாதா?: தவெக தலைவர் விஜய்க்கு சீமான் அடுக்கடுக்கான கேள்வி!

TVK leader Vijay

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெறும் 12-வது நாளிலேயே பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்றும், அதே பதவிக்காக மீண்டும் தவெகவில் இணைந்து போட்டியிடுவதற்கான அவசியம் என்ன என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மக்களின் வரிப்பணத்தை ஒருபோதும் வீணடிக்க மாட்டேன் என்று மேடைகளில் பேசி வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேவையற்ற இந்த … Read more

இது கேலிக்கூத்து: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Madras High Court

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான பிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மற்றொரு கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது ஒரு கேலிக்கூத்து என மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளது. இந்த இடைத்தேர்தல்களுக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், “மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பற்ற முறையில் தங்களது பதவியை ராஜினாமா … Read more

விஜய்க்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும்: நடிகர் கருணாஸ் நெகிழ்ச்சி பேட்டி!

vijay vs karunas

நடிகர் விஜயுடன் இணைந்து ‘திருமலை’ திரைப்படத்தில் பணியாற்றிய பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நடிகர் கருணாஸ், அவரது நற்குணங்கள் மற்றும் சமூக அக்கறை குறித்து ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். “நான் அரசியல் ரீதியாக அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும் கூட, சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எங்களைப் பார்த்தவுடனே, என் மகன் ‘கென்’ எப்படி இருக்கிறான் என்று மிகவும் அன்போடு நல விசாரித்தார்” எனத் தெரிவித்தார். அரசியல் மற்றும் சமூகப் பணிகளுக்கு இடையே … Read more

விஜய் சேதுபதி மீதான தவெகவினரின் தாக்குதல் கண்டனத்திற்குரியது: சீமான் அதிரடி அறிக்கை!

Seeman's bold statement

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே நடைபெற்ற ஒரு சாதாரண விளையாட்டுச் சூழலை அடிப்படையாக வைத்து தலைமைத்துவம் குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜய் சேதுபதி தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலவர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே தவறாகப் பொருள் கற்பித்துக்கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகன் என்று வெறுமனே … Read more

மக்களை நம்பி வந்தவர்: நடிகர் விஜய் குறித்து இயக்குநர் சுப்பிரமணிய சிவா புகழாரம்!

Subramania Siva

அரசியலுக்குள் நுழையும் போது “நான் இனிமேல் நடிக்க மாட்டேன்” என்று துணிச்சலான முடிவை எடுத்த ஒரே நபர் நடிகர் விஜய் தான் என்று இயக்குநர் சுப்பிரமணிய சிவா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்துப் பேசிய அவர், “திரையுலகில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கூட தனது 60 வயதிற்கு மேல் தான் இனிமேல் நடிக்கக் கூடாது என்கிற முடிவை எடுத்தார். ஆனால், நடிகர் விஜயோ தனது திரையுலக வாழ்க்கையின் உச்சகட்டப் புகழில் இருக்கும் … Read more